"கார்த்தி, இங்க வாப்பா" - என் அம்மா.
வேற எப்பவாது அம்மா இப்படி கூப்பிட்டிருந்தா இடத்தில இருந்துகிட்டே "என்னாம்மா?" ன்னு கேட்டுட்டு என் வேலைய பாத்திருப்பேன். ஆனால் அப்போ அப்புடி செய்யல . ஏன்னா, அப்பாவும் அப்போ வீட்ல இருந்தார். ரைட்டு இன்னக்கி பெருசா ஏதோ மேட்டர் நம்மட்ட கேக்கப்போறாங்க்யன்னு நினைச்சுக்கிட்டே உள்ள போனேன். எங்கப்பா ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றவரு. வேலைல பிசியா இருக்குறதுனால அவரு வீட்ல இருக்குறதே அபூர்வம். எங்க ரெண்டு பேருக்கும் இடைல முக்கால்வாசி தகவல் தொடர்புகள் அம்மா மூலமாகவோ இல்ல போன் மூலமாவோ தான் நடக்கும். நான் படிச்சி முடிச்சி சென்னைக்கு வேலைக்கு போனதுலர்ந்து நானும் அப்பாவும் நேர்ல பேசிக்கிட்டதவிட போன்லதான் அதிகமா பேசியிருப்போம். நான் ஒவ்வொரு தடவ ஊருக்கு போய்ட்டு, திரும்ப சென்னை கெளம்புற அன்னைக்கு ஒரு 30 நிமிஷம் நாங்க நேர்ல பேசிப்போம். அப்புடி ஒரு சந்தர்ப்பம் தான் இது.
"வேலையெல்லாம் எப்பிடி போய்க்கிட்டிருக்கு?"
"ம்... நல்லா.."
"புதுசா எதும் வேலை வந்ததா?"
"இல்ல.. அதே தான்.."
"சாப்ட்வேருல்லாம் கொஞ்சம் டவுனுங்குறாங்களே... உங்க கம்பேனில எப்பிடி?"
"இல்ல எப்பவும் போலதான் போய்ட்டிருக்கு"
"ம்.. மூணு நாள் இங்க நல்லா ரெஸ்ட் எடுத்தியா?"
"ம்.."
"உன் ஜாதகத்த இங்க நம்ம சங்கத்துல பதிவு பண்ணி வச்சிருந்தோம்ல.. ஒரு வரன் வந்திருக்கு. நாளைக்கு போய் பொருத்தம் பாக்கணும். பொருத்தம் பாத்துட்டு எப்பிடினு நாளைக்கு சொல்றேன்."
"ம்"
"பொண்ணு பேரு மீனா. வீடு திருச்சி. மெட்ராஸ்ல ஹாஸ்டல்ல தங்கி Infosysல வேல பாக்குதாம். கல்யாணத்துக்கு அப்புறம், வேணும்னா வேலைக்கு போகட்டும்... இல்லைன்னா வீட்ல இருக்கட்டும்.. உன் விருப்பம் எப்டி?"
"ம்.. போறதுன்னா போகட்டும்.. இல்லைன்னா இருக்கட்டும்.."
"ம். பொருத்தம் நல்லா இருந்ததுன்னா இந்த ஆவணிலயே முடிச்சுருவோம்"
"ம்."
"சரி. எந்த Trainல கெளம்புற."
"மங்களூர் எக்ஸ்பிரஸ்"
"10 மணிக்கா?"
"10.20"
"நேரம் ஆச்சு.. சாப்புடு. கொண்டு போய் பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு வரேன்."
"ம்"
இவ்வளவு நேர பேச்சுவார்த்தைல என் மனசுல ஒடிட்டிருந்தது மூணே மூணு விஷயம். மீனா-திருச்சி-Infosys. அதே கனவோடு சாப்பிட்டு பஸ் பிடித்து திருச்சி வந்து சேர்ந்தேன். மங்களூர் எக்ஸ்பிரஸ் வர இன்னும் 20 நிமிஷம் இருந்துச்சு. அப்போ தோணுச்சு ஒரு கவிதை..
"மங்களூர் எக்ஸ்பிரஸ் வர இன்னும் 20 நிமிஷம்...
என் மனதிலுள்ளவள் வர இன்னும் எத்தனை நிமிஷம்?...."
"டேய் டேய் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..." - இதை ஒரு கவிதைன்னு என் Roommatesட சொன்னா அவங்க்யளோட Reaction இப்பவே என் காதுல கேட்டுச்சு. அதோட மங்களூர் எக்ஸ்பிரஸ் வர சத்தமும் கேட்டுச்சு.
Saturday, January 16, 2010
Subscribe to:
Posts (Atom)
